பாதுகாப்பு குளறுபடி.. பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பா.ஜ.க. தலைவர்கள் பிரார்த்தனை

 
மோடியின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்த சிவ்ராஜ் சிங் சவுகான்

பஞ்சாபில் நேற்று பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தனது பஞ்சாப் பயணத்தை திடீரென ரத்து செய்தார், இதனையடுத்து பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக பா.ஜ.க. தலைவர்கள் கோயில்களில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.  ஆனால் பிரதமர்  செல்லும் பாதையில் போராட்டக்காரர்கள் சாலையை மறித்தனர். இதனால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கன்வாய் வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் நின்றது. இதனையடுத்து பிரதமர் மோடி தனது பஞ்சாப் பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார்.

சாலையில் பிரதமர் மோடி கன்வாய்

பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து, பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பா.ஜ.க.வின் கோயில்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் உள்ள குபா கோயிலக்கு சென்று, பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்தார். நீண்ட ஆயுளை அளிப்பதாக நம்பப்படும் ரிக் வேதத்தின் ஒரு வசமான மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதற்கான சடங்குகளை அவர் செய்தார். 108 அர்ச்சகர்கள் கொண்ட குழு நேற்று முதல் 3 நாட்களுககு மந்திரத்தை ஓதுவார்கள்.

மோடி

மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா உஜ்ஜைனியில் உள்ள சிவன் கோயிலில், பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக இறைவன் சிவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தலைநகர் டெல்லியில், பா.ஜ.க. தலவர்கள் ஜாண்டேவாலன் கோயிலில் பிரார்த்தனை செய்தார். மேலும் நாட்டின் பல பகுதிகளில் பா.ஜ.க. தலைவர்கள் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக கோயில்களில் பிரார்த்தனை செய்தனர்.