`200 தொகுதிகளில் திமுக போட்டி; கூட்டணி கட்சிகளுக்கு 34 சீட்!’- காங்கிரஸ், விசிகவுக்கு `செக்’ வைக்கும் ஸ்டாலின்

 

`200 தொகுதிகளில் திமுக போட்டி; கூட்டணி கட்சிகளுக்கு 34 சீட்!’- காங்கிரஸ், விசிகவுக்கு `செக்’ வைக்கும் ஸ்டாலின்

விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 43 சீட்டுகளை ஒதுக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ எந்த தேர்தல் வந்தாலும் முதலில் வேட்பாளர்களை அறிவித்து விடுவார் ஜெயலலிதா. கூட்டணி கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார். வேறு வழியின்றி கூட்டணி கட்சிகள், ஜெயலலிதா கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு கப்சீப் ஆகிவிடும். ஆனால், கருணாநிதியோ, கூட்டணி கட்சிகளை அனுசரித்து கொண்டு போவதோடு, கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பவர்.

`200 தொகுதிகளில் திமுக போட்டி; கூட்டணி கட்சிகளுக்கு 34 சீட்!’- காங்கிரஸ், விசிகவுக்கு `செக்’ வைக்கும் ஸ்டாலின்

தற்போது ஜெயலலிதா, கருணாநிதி மறைந்துவிட்டதால் ஓபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் உள்ள அதிமுகவும், மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவும் கூட்டணி அமைத்து ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2011 தேர்தலிலும், 2016 தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு திமுக அதிக தொகுதிகளை தாரை வார்த்துவிட்டோம் என்று கட்சி தொண்டர்கள் ஓப்பனாக பேசி வந்தனர். 2016 தேர்தலில் கூடுதலாக 20 தொகுதிகளில் நாம போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக ஆட்சியை பிடித்திருப்போம் என்று அவர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வந்தனர். 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்ததாக திமுகவினரே பேசினர்.

விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை கொடுக்க திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் நடந்த தவறை இந்த தேர்தலில் திமுக செய்யாது என்றும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பதாகவும் இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை வெல்ல முடியும் என்றும் கணக்கு போகிறது திமுக தலைமை. மத்தியில் செல்வாக்கை இழந்து தவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கவே திமுக விரும்புகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனை காரணம் காட்டி காங்கிரசுக்கு தொகுதிகளை குறைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

`200 தொகுதிகளில் திமுக போட்டி; கூட்டணி கட்சிகளுக்கு 34 சீட்!’- காங்கிரஸ், விசிகவுக்கு `செக்’ வைக்கும் ஸ்டாலின்

மதிமுகவுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளது. ஸ்டாலினுடன் அதிகமாக நெருக்கத்தில் இருக்கிறார் வைகோ. இதனால் அவர்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கலாம் என்று தெரிகிறது. காரணம், அவர்களை அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகளை பொறுத்த வரை கருணாநிதி இருந்த காலத்தில் திருமாவளவனை அனுசரித்து போனார். அப்போது, நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியே ஒதுக்கியது திமுக. அதற்கு ஸ்டாலின்தான் காரணம் ன்று அப்போது கூறப்பட்டது. இதனால், ஏக கடுப்பானார் திருமாவளவன். கூட்டணியை விட்டு வெளியேறவும் அவர் முடிவு செய்தார். திக தலைவர் கி.வீரமணி, திருமாவளவனை சமாதானப்படுத்தி மேலும் ஒரு தொகுதியை வாங்கிக் கொடுத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் தேர்தலில் விசிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

`200 தொகுதிகளில் திமுக போட்டி; கூட்டணி கட்சிகளுக்கு 34 சீட்!’- காங்கிரஸ், விசிகவுக்கு `செக்’ வைக்கும் ஸ்டாலின்

கம்யூனிஸ்டு கட்சிகளை பொறுத்த வரை திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்வார்கள். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் அடம்பிடிக்கும் பட்சத்தில் ஒன்று, இரண்டு தொகுதிகளை விட்டுக்கொடுக்க விட்டுக் கொடுக்க திமுக முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. கடந்த காலங்களை போன்று தற்போது கூட்டணி கட்சிகள் இழுத்த இழுப்பிற்கு திமுக செல்லாது என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.