தமிழ்நாட்டை கைப்பற்றபோவது யார்? வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்!
தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பாஜக.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 36 முதல் 39 இடங்களை பிடிக்கும் - நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 1 முதல் 3 இடங்கள் பிடிக்கும். அதிமுக 0 முதல் 2 இடங்கள் பிடிக்கும். INDIA TODAY தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 33 முதல் 37 இடங்களை பிடிக்கும். பாஜக கூட்டணி 2 முதல் 4 இடங்கள் பிடிக்கும். அதிமுக 0 முதல் 2 இடங்கள் பிடிக்கும்.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, தமிழ்நாட்டில் திமுகவின் கையே ஓங்கியுள்ளது. அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பாஜக. இதன்மூலம் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதளபாதளத்திற்கு சென்றுள்ளது தெரிகிறது.