3-வது முறையாக பிரதமராகும் மோடி!

 
modi

பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறுகிறது.

Modi vs rahul

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 353-368 இடங்களை பெறும் என வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 118-133  இடங்களிலும், மற்றவை 43- 48 இடங்களிலும் வெல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கண்காணிக்கப்பட்டுள்ளது.

Modi

Republic TV-PMARQ கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி: 359, I.N.D.I.A கூட்டணி: 154, மற்றவை- 30, NDTV கருத்துக்கணிப்பின் படி, பாஜக: 371, காங்கிரஸ்: 125, மற்றவை: 47
இடங்களிலும், REPUBLIC TV கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி: 359, I.N.D.I.A கூட்டணி-154, மற்றவை- 30, NEWSX கருத்துக்கணிப்பின் படி பாஜக: 371, காங்கிரஸ்: 125, மற்றவை: 4 இடங்களிலும், INDIA NEWS கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி: 371, I.N.D.I.A கூட்டணி: 125, மற்றவை- 47,

359 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் என்றும் 154 இடங்களை இந்தியா கூட்டணி பெறும் என்றும் மற்றவர்கள் 30 இடங்களை பெறுவார்கள் என்றும் ரிபப்ளிக் டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாக கூறியுள்ளது