கூட்டணியை பற்றி பிறகு யோசிப்போம் - கடுப்பான இபிஎஸ்

 
a


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததில் இருந்து அக்கட்சியை கடுமையாக  விமர்சித்தும் ,அலட்சியப்படுத்தியும் வருகின்றனர் தமிழக பாஜகவினர். அதிமுக அப்போது இரட்டைத்தலைமையில் இருந்ததால் பொறுமையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக இப்போது ஒற்றைத்தலைமைக்கு வந்ததும்  முழு எதிர்ப்பையும் காட்டி இருக்கிறார் . 

 இதில் அப்செட் ஆகி இருக்கிறது  தமிழக பாஜக தலைமை.   இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது .  இதை அடுத்து இரு தரப்பிலும் கூட்டணி பிளவை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ad

 இந்த நிலையில் தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டம் முடிந்ததும் கட்சியின் சீனியர்களுடன் பாஜக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் எடப்பாடி . அப்போது தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி இடம் ஒன்றைச்சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். 

ad1

 இதுவரை நடந்த 17 நாடாளுமன்ற தேர்தலில் வலுவான பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திய கூட்டணிக்குத் தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.  1998 -99 இல் வாஜ்பாயை ஏற்றுக்கொண்டு வாக்களித்தார்கள்.  2014 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதால் தான் அப்போது வெற்றி கிடைத்தது . 2019 ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை முன்னிறுத்தியதால்தான் திமுக வெற்றி பெற்றது.  அப்படி பார்க்கும் போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான பிரதமர் வேட்பாளர் வேண்டும்.  அதனால்  பாஜகவுடன் ஆன கூட்டணியை தொடர்வது தான் நல்லது . இல்லை என்றால் நீலகிரி, திருப்பூர் ,கோவை, தென்கா,சி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் எல்லாம் திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

ad2

 இதை கேட்டு கடுப்பான எடப்பாடி,   நமது இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல; 2026 சட்டமன்றத் தேர்தல்தான் . அதனால் அதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள். ஈரோடு கிழக்கில் அத்தனை சவால்களையும் முறியடித்து 25 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்து விட்டோம் . முதலில் இந்த வாக்கு வங்கியை 35 சதவிகிதமாக உறுதிப்படுத்துவோம்.    அதன் பின்னர் கூட்டணிய பற்றி யோசிப்போம் என்று கூறி இருக்கிறார்.