ஜெனரல் பிபின் ராவத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த எங்களை அனுமதிக்கவில்லை.. மத்திய அரசை குற்றம் சாட்டிய கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்டோருக்கு மாநிலங்களவையில் இறுதி அஞ்சலி செலுத்த எங்களை அனுமதிக்கவில்லை என்று மத்திய அரசு மீது மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

கடந்த புதன்கிழமையன்று குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 13 பேர் உயிர் இழந்தனர். பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு மாநிலங்களவையில் இறுதி அஞ்சலி செலுத்த எங்களை அனுமதிக்கவில்லை என்று மத்திய அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

பிபின் ராவத்
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பை தாங்கும் வலிமை கிடைக்கட்டும். காயமடைந்த வீரர் வீரர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பிறருக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் இன்று (நேற்று) நிற்கிறோம். நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

மத்திய அரசு

எதிர்க்கட்சி தலைவரான நான் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி அஞ்சலி மற்றும் தலா ஒரு நிமிடம் பேச விரும்பினோம். ஆனால் அரசாங்கமோ அல்லது மாநிலங்களவை தலைவரோ எங்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு படைத்தளபதிக்கு அஞ்சலி செலுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அது என்ன வகையான ஜனநாயகம்? இந்த நாடாளுமன்றம் எவ்வாறு வழிநடத்தப்படுகிறது? அஞ்சலி செலுத்த எங்களுக்கு நேரம் ஒதுக்காத செயலை கண்டிக்கிறோம்.  நாங்கள் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் போராட்டத்தை ஒரு நாள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.