பால் தாக்கரே பேசிய வீடியோவை வெளியிட்டு உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக தாக்கிய ராஜ் தாக்கரே

 
பால் தாக்கரே

மறைந்த பால் தாக்கரே முன்பு மசூதிகளில் உள்ள ஒலி  பெருக்கிகளை அகற்றுவோம்,  சாலைகளில் தொழுகையை நிறுத்துவோம் என பேசிய வீடியோவை ராஜ் தாக்கரே டிவிட்டரில் பதிவேற்றம் செய்தார். இது உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஆசான்-ஹனுமன் சர்ச்சைக்கு மத்தியில்,மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தனது டிவிட்டரில் பக்கத்தில் சிவ சேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரே முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு  வந்தால் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள மசூதிகளில் உள்ள ஒலி  பெருக்கிகளை அகற்றுவோம்,  சாலைகளில் தொழுகையை நிறுத்துவோம் என பால் தாக்கரே பேசி இருந்தார்.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மறைந்த பால் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்றுவோம் என்று முன்பே உறுதி அளித்தார். ஆனால் அவரது மகனும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்ற தயங்குகிறார் என ராஜ் தாக்கரே சொல்லாமல் சொல்லியுள்ளார். ராஜ் தாக்கரே வீடியோ குறித்து பா.ஜ.க.வின் ஷெசாத் பூனவல்லா கூறியதாவது: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி மற்றும் சரத் பவாரின் அழுத்தத்தில் உள்ளார்.அதனால் தான் ஒலி பெருக்கிகளுக்கு எதிராக அவரால் முடிவெடுக்க முடியவில்லை. 

ராஜ்தாக்கரே

மறைந்த பால் தாக்கரே மற்றும் அவரது கொள்கைகளை உத்தவ் ஜி மறந்து விட்டார். இந்துத்துவா, வீர் சாவர்க்கர் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றில் உத்தவ் தாக்கரே சமரசம் செய்து கொண்டார். மறைந்த பால் தாக்கரே ஆசான் பிரார்த்தனைகளுக்கு ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை மற்றும் சாலைகளில் தொழுகை நடத்துவதை கடுமையாக எதிர்த்தார்.