எந்த குழப்பமும் இல்லாமல் எல்.முருகன் கூட்டணியை எடுத்துக்கொண்டார் -காயத்ரி ரகுராம்

 
அ

 எந்த குழப்பமும் இல்லாமல் எல். முருகன் கூட்டணியை எடுத்துக் கொண்டார் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறி இருப்பதன் மூலம் , அப்படி என்றால் அண்ணாமலை குழப்பத்துடன் கூட்டணியை கையாளுகிறாரா? அமைதியான முறையில் கூட்டணியை அவர் அணுகவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

க்

 பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம்,  மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் ஆதரவாளர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்  திருச்சி சூர்யா சிவா முன்னர் குற்றம் சாட்டியிருந்தார் . அவர் சொல்வது உண்மை என்று நம்பும் படியாகவே தொடர்ந்து காயத்ரி ரகுராம் அமைச்சர் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

 இந்த நிலையில்,   ’’2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க, பா.ஜ.க இணைந்து மகா கூட்டணி வைக்கப் போகிறது என்றால், ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவரால் அருந்ததியர் சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும்.

டாக்டர் எல்.முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோது அதிமுகவுடன் நட்புடன் இருந்தார். மேலும் அவர் வெற்றிகரமான முறையில் அமைதியான முறையில் எந்த குழப்பமும் இல்லாமல் கூட்டணியை எடுத்துக்கொண்டார்’’ என்று காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

 அதிமுக பன்னீர்செல்வம் அணி -பழனிச்சாமி அணி என்று இரண்டு அணியாக நிற்கிறது.  இதில் பழனிச்சாமி அணி தான் வெற்றி அணியாக இருக்கிறது . இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   இது குறித்து காயத்ரி ரகுராம் கூறியிருப்பதன் மூலம்,  அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் எல். முருகன் தலையிட்டால் அதிமுக கூட்டணி சுமூகமாக முடியும் . வெற்றி பெறுவதற்கும் அவர்  ஒரு காரணமாக இருப்பார் என்கிற ரீதியில்  கருத்து தெரிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.