எல்.முருகன் உள்ளே - ஆ.ராசா வெளியே

 
la

 மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் ஆராசா தொகுதியை குறி வைத்திருப்பதால்,  ஆ. ராசா அங்கிருந்து வெளியேறி திருமாவளவன் தொகுதிக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார்.

t

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் . அதற்கான வேலைகள் எல்லாம் வேக வேகமாக நடந்து வருகின்றன.   இதனால் நீலகிரி தொகுதியில் எம். பி .ஆக இருக்கும் ஆ ராசா அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பாமல் வேறு தொகுதிக்கு மாற முடிவெடுத்திருக்கிறார்.

 இந்த நேரத்தில் தான் சிதம்பரம் தொகுதியில் எம்பியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேறு தொகுதிக்கு மாற முடிவு எடுத்து விட்டதால்,  அதாவது சிதம்பரம் -விழுப்புரம் என்று அருகருகே இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் எம்பியாக இருக்கிறார்கள். கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் எம். பி. ஆக இருக்கிறார்.   இந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியின் எம். பி. ஆக உள்ளார்.

 இரண்டு முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் திருமாவளவன்.  அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு கட்சியை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வைத்துக் கொள்ள விரும்பாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டால் கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நினைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளுவர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார் .

இதை அறிந்த ஆ. ராசா சிதம்பரம் தொகுதியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.   ஆ ராசாவின் சொந்த தொகுதியான பெரம்பலூர் தொகுதி பொதுத் தொகுதி என்பதால் அங்கு அவர் நிற்கவில்லை.  அந்த தொகுதியில் அமைச்சர் நேரு,  தன் மகன் அருணனை நிறுத்த முயற்சித்து வருகிறார் என்று தகவல்.