அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிருஷ்ணசாமி விதித்த கெடு

 
k

சட்டவிரோத மது விற்பனையால் வரும் பணம் தனிநபர் கஜானாவுக்கு போகிறது.   இதனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச இருக்கிறேன் என்று கூறினார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

 கோவை குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது,   ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இதனால் ஆன்லைன் ரம்மியால் சொத்துக்களை இழந்தார்கள்,  உயிர்களை இழந்தார்கள் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது.  ஆனால் டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகள் நடக்கிறது.

se

 அதனால்தான் டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.   தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்து தாக்கும் போக்கு இருக்கிறது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்.  ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை  எண்ணிப்பார்க்க முடியாது.   சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என சொல்லுவது எல்லாம் ஆபத்தானது என்றவர், 

 2021 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி வந்த போது கருப்பு பலூன் பறந்தது.  ஆனால் இப்போது அதை நிறுத்தி விட்டு சரண் அடைந்து விட்டார்கள்.  குடும்பமே போய் மோடியிடம் கை தூக்கி நிற்பது இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா என்று கேட்கிறார்.   இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேல் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி,   ரம்மிக்கு மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் . பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும் .  டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவை இல்லை.   டாஸ்மாக் கடைகளை போல் பார்களில் சட்டவிரோதமாக மதுவிற்கப்படுகிறது.   கரூர் மூலமா நடைபெறுகிறது .  எத்தனை சட்டவிரோத பார்க்கள் நடக்கிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும்.  மே 15 ஆம் தேதிக்குள் சட்ட விரோத சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும்.   இல்லையென்றால் நாங்களே மூடுவோம் என்று ஆவேசப்பட்டார்.

 மேலும் அது குறித்து பேசிய கிருஷ்ணசாமி,  டாஸ்மாக் பார்களை மூடப் போராட்டம் நடத்துவோம்.  மது தயாரிப்பு ஆலைகளையும் மூடவும் போராட்டம் நடத்துவோம். சட்டவிரோத மது விற்பனையால் தனிநபர் கஜானாவுக்கு பணம் போகிறது.   பல இடங்களில் சட்டவிரோதமாக நடக்கிறது.  இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச இருக்கிறேன் என்று தெரிவித்தார்.