அதிமுகவை காப்பாற்ற ஓபிஎஸ்-ஐ விட்டால் வேறு யாரும் இல்லை- கோவை செல்வராஜ்

 
kovai selvaraj

சென்னை கிரீன்வேஸ் சாலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

பெண்கள் விவகாரத்தில் சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார்! கோவை  செல்வராஜூக்கு வந்தது பாருங்க கோபம் | Kovai selvaraj says, Ex Minister  Jayakumar is the one who ...

அப்போது பேசிய அவர், “பழனிசாமி ஆதரவாளர்கள் அடியாட்களுடன் வந்ததால்தான் கலவரம் நடந்தது. ஓபன்னீர்செல்வம் எந்த அடியாட்களையும் அழைத்துவரவில்லை. போலி நாடகம் போட்டு ஓபிஎஸ் மீது குற்றஞ்சாட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் வெறும் 700 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். போலி உறுப்பினர்களை வைத்து பொதுக்குழு நடந்தப்பட்டது. சட்ட விதிமுறைப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் பாதி பேர் மனசாட்சியோடு பொதுக்குழு கூட்டத்துக்கு செல்லவில்லை.

அதிமுகவை காப்பாற்ற ஓபிஎஸ்-ஐ விட்டால் வேறு யாரும் இல்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபன்னீர்செல்வம்” எனக் கூறினார்.