ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் செல்லாமல் இருப்பது ஏன்?

 
admk office

காவல்துறை விசாரணை நடப்பதால் தான் அதிமுக தலைமை அலுவலகம் செல்லாமல் இருக்கிறோமென  ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

அதிமுக அலுவலகம் ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டு சொத்து இல்லை-கொளத்தூர்  கிருஷ்ணமூர்த்தி | EPS is the cause of AIADMK's defeat. He is a changing  chameleon - Kolathur ...


சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வழங்கிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஓ.பி.எஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி  முறையிட்டு மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணமூர்த்தி, “நாங்கள் அளித்த மனுவுக்கு கிடைத்த வெற்றியே தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நடைமுறையை பின்பற்றி அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரை சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உட்பட அனைவரும் சேர்ந்துதான் தேர்ந்தெடுத்தார்கள். அவருக்கான பதவி காலம் 2026 வரை இருக்கும்.  மத்திய அரசு இடைக்கால பொதுச் செயலாளர் என்று வழங்கியிருக்கும் கடிதத்தில் உள்ள குழப்பத்தினை தேர்தல் ஆணையத்தில் வைத்தே அவர்கள் சரி செய்து கொள்ள வேண்டும்.  சி பி சி ஐ டி காவல்துறையினர் விசாரணை சென்று கொண்டிருப்பதாலேயே, ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுகவின் தலைமை கழகம் செல்லவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த அழைப்பை ஏற்று 16ஆம் தேதி அதிமுக சார்பாக ஓபிஎஸ் பிரதிநிதி தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்தார்.