கொடநாடு வழக்கு- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்காதது ஏன்? சி. ஆர். சரஸ்வதி கேள்வி

 
cr

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு -பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை பிடித்து காவல்துறை தண்டிக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் செய்தி தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி.  

 திருச்சிற்றம்பலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.ஆர். சரஸ்வதி பங்கேற்று சிறப்புரையாற்றி உள்ளார்.
அப்போது அவர்,    எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கினார் சசிகலா.   ஆனால் அவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி.   அதேபோல் எப்போதும் ஸ்டெடியாக இருக்கும் சி.வி. சண்முகம் சசிகலாவை   அம்மா என்று அழைக்க வேண்டும் என்று பேசினார்.    உதயகுமார் சின்னம்மா அவர்களை நீங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறினார்.  ஆனால் இப்போது ஜெயக்குமார் சின்னம்மா அவர்களையும் டிடிவி தினகரன் அவர்களையும்  கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கூறுகிறார்.   சொல்வதற்கு நீ யார்?  உங்களிடம் டெண்டரில்  நாங்கள் பங்கு ஏற்கவா போகிறோம் என்று கூறியிருக்கிறார்.

crs

அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியில் எண்ணற்ற பல நல திட்டங்கள் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கும் படி செய்தார்.   ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.   ஆனால் இப்போது செங்கல்லை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேட்கிறார்கள்? இப்போது நாங்கள் அவர்களைப் பார்த்து கேட்கிறோம்.   நீங்க சொன்ன வாக்குறுதிகள் எங்கே? 

கொடநாடு மற்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என்று சொன்னீர்களே என்ன ஆச்சு? என்று நாங்கள் கேட்கிறோம். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குற்றவாளிகளை அரியானா மாநிலம் வரைக்கும் சென்று கைது செய்யும் தமிழக  காவல்துறையால் இந்த கொடநாடு, பொள்ளாச்சி வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லையா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.