சமரசம் செய்து கொண்டு பல்கலைக்கழகங்களின் வேந்தராக நீடிக்க முடியாது... கேரள கவர்னர் உறுதி.. நெருக்கடியில் பினராயி

 
ஆரிப் முகமது கான்

தேசிய நிறுவனங்களின் கண்ணியத்துடன் சமரசம் செய்து கொண்டு நான் (பல்கலைக்கழகங்களின்) வேந்தராக நீடிக்க முடியாது என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியிருப்பது, பினராயி விஜயன் அரசுக்கு  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கடந்த மாதம் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதை நான் காண்கிறேன், இந்த சூழலில் என்னால் வேலை செய்ய முடியாது. பல்கலைக்கழகத்தின் சுயாட்சி முற்றிலும் பறிக்கப்படுகிறது. வேறு சில அதிகாரங்களுக்கு எதிராக உங்கள் அதிகாரத்தை வலியுறுத்தும்போது மோதல் வரும். எனவே நீங்கள் (பினராயி விஜயன்)  ஒரு அவசர சட்டத்தை (பல்கலைக்கழக வேந்தரின் அதிகாரங்களை முதல்வரிடம் ஒப்படைப்பதற்கான  அவசர சட்டம்) கொண்டு வருமாறு எழுதியிருந்தார்.

கேரள பல்கலைக்கழகம்

இந்நிலையில் தற்போது, சமரசம் செய்து கொண்டு பல்கலைக்கழகங்களின் வேந்தராக நீடிக்க முடியாது என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தேசிய நிறுவனங்களின் கண்ணியத்துடன் சமரசம் செய்து கொண்டு நான் (பல்கலைக்கழகங்களின்) வேந்தராக நீடிக்க முடியாது. ஒன்று பல்கலைக்கழகத்தின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற தெளிவான உறுதிமொழி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் (கேரள அரசாங்கம்) வேந்தர் பதவியை எடுத்துக் கொள்வார்கள்.

பினராயி விஜயன்

தேசிய நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் தீவிரமான ஆழமான விஷயங்களை பற்றி நான் கவலைப்படுகிறேன். இந்த பதவியில் அரசியல் சாசனத்தின் கண்ணியத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம். தலையீடு காரணமாக மாநிலத்தின் உயர்கல்வி நாய்கள் வழியாக சென்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆளும் கட்சியினர் பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிடுவதால் தன்னால் பல்கலைக்கழக வேந்தராக பணியாற்ற முடியாது என்று கவர்னர் உறுதியாக கூறுவது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.