ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே பதவி வெறி; கட்சி மீது அக்கறையில்லை- கேசி பழனிசாமி

 
KC Palanisamy

அதிமுக கட்சியின் வளர்ச்சி பற்றி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் துளிகூட அக்கரை இல்லை என அதிமுக முன்னாள் எம்.பி ., கே.சி.பழனிசாமி சாடியுள்ளார். 

கே.சி.பழனிசாமி:அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தினாரா? - விரிவான தகவல்கள்  - BBC News தமிழ்

விழுப்புரத்தில் அதிமுக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்களின் கருத்துக் கூட்டம் என்று அடிப்படையில் இக்கூட்டமானது நடத்தப்பட்டது. 

கூட்டத்திற்கு  பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, “ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இருவருக்கும் கட்சியின் வளர்ச்சி பற்றி துளிகூட அக்கரை இல்லை. அதிமுக வழக்கில் நீதிமன்றம்  தீர்ப்பினால் இருவரும் மாறி மாறி மேல் முறையீடு மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் கட்சியின் சின்னமும் கொடியும் தேர்தல் ஆணையத்தால் வருகின்ற 2026 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றம் ஐந்து முறை காமெடி செய்துள்ளத. 

பொதுக்குழு உறுப்பினர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு தவறானது. இரு நீதிபதிகளின் தீர்ப்பில் முரண்பாடு உள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி நீதிமன்றம் செல்வது கட்சிக்கு பாதிப்பு. எடப்பாடி பழனிசாமி முதலைமைச்சர் பதவிக்கும், ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மட்டுமே உள்நோக்கம் கொண்டவர்கள். மத்திய பாஜக அரசு தமிழக அரசை வஞ்சிக்கிறது. அதைப்பற்றி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒருவருமே வாய் திறக்கவில்லை” என குற்றம் சாட்டினார்