அனாதையாக்கி விட்டனர்; வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்

 

அனாதையாக்கி விட்டனர்; வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுருந்த எம்எல்ஏ கருணாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகே பனங்காடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

அனாதையாக்கி விட்டனர்; வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ கருணாஸ், “தொடர்ந்து 18 முறைகளுக்கு மேலாக ஒட்டுமொத்த தமிழகத்தில் வாழக்கூடிய 68 சீர்மரபினர் மக்களுடைய இட ஒதுக்கீடு பிரச்சனையாகவும் , முக்குலத்தோர் சமுதாய மக்களை 94 ஜெயலலிதா தேவர் இனம் என்று அறிவித்த அரசாணையை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.எங்களுடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி என்ற கோரிக்கையை புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் மற்ற சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி.

அனாதையாக்கி விட்டனர்; வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்

இதன் மூலம் முக்குலத்தோர் சமூகத்தை புறக்கணித்து இந்த தேர்தலில் அவர்களை அரசியல் அனாதையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.ஜனநாயக ரீதியில் எங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளோம். அதிமுக அரசு ஒருசில சமூகத்தை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை அரசியல் அனாதையாக்க திட்டமிடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.