"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு"- விஜய்யை விமர்சித்த கரு. பழனியப்பன்

 
ப்

கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு என த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.

மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் எழுதிய புலம்பெநர் தொழிலாளர்கள் (தமிழ் ,ஆங்கிலம்) வாகன உற்பத்தியில் தமிழ்நாடு(தமிழ், ஆங்கிலம்) என நான்கு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்த நூல்களை பேராசிரியர் சுப வீரபாண்டியன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் , சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பதாக இருந்தது , திமுக செயற்குழு காரணமாக இருவரும் பங்கேற்கவில்லை.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கரு. பழனியப்பன், "கட்சி தொடங்கிய ஆண்டிலேயே ஒருவர் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாமா..? அப்படிப் பேசுவது ஆணவப் பேச்சு என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தையையே வெல்லும் விதமாகவும் , தாண்டும்  விதமாகவும் செயல்படுகிறார்" கூறினார்.