“ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தி பாஜகவை வீழ்த்த வேண்டும்”

 
karthik chidambaram

ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தி, பாஜக வேட்பாளரை தோற்கடித்து அல்லது போட்டியில் நெருக்கமான முடிவு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றியாக தான் கருதுகிறேன் என எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

CBI to question Karti Chidambaram in Chinese visa scam case today |  Business Standard News

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காலங்காலமாக ஆதினம், அரசு, கடவுள், நம்பிக்கை போன்ற விஷயங்கள் சுகமாகத்தான் இருந்தது. அண்மையில் பாஜகவில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார். அவர் கொள்கை ரீதியாக சேர்ந்ததாக தெரியவில்லை. அவருடைய கடந்த கால பணியிலிருந்து நீங்கி அரசியல் கட்சியை தேடி அவருடைய சௌகரியத்திற்காக அந்த அரசியல் கட்சியில் சேர்ந்ததால் அதை குழப்ப வேண்டும் என்கிற எண்ணத்தோடு சில சம்பவங்கள் நடக்கின்றன. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆன்மீகம், அரசியல், நாத்திகம், ஆத்திகம், பெரியார், பிள்ளையார் அனைவரும் சமூகமாக இருந்த ஊர். இந்த குழப்பங்கள் பத்திரிக்கையில் வாதமாக இருக்கலாமே தவிர சமூகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராது. முதலில் நாங்கள் தாண்ட வேண்டிய கிணறு ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தி பாஜக வேட்பாளரை தோற்கடித்து அல்லது போட்டியில் நெருக்கமான முடிவு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றியாக தான் நான் கருதுகிறேன். தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன என்று தெரிவதற்காக வெள்ளை அறிக்கை ஒன்று கொடுத்திருந்தனர். அதை முழுமையாக வரவேற்பேன். இருக்கும் நிதியை வைத்து தான் அவர்கள் பங்கீடு அளிக்க வேண்டும் அதனால் பயனாளிகளுக்கு மட்டும்தான் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை. ஆனால் தகுதியுடையவர்கள் சேர்க்காமல் இருந்திருந்தால் அதை பரிசீலனை செய்ய வேண்டும். டிடிவி தினகரன் எதிர்காலத்தை பற்றி பிரகடனம் செய்வதற்கு முன்பாக அவருடைய எதிர்காலத்தைப் பற்றி அவர் சந்திக்க வேண்டும்” என்று கூறினார்.