கர்நாடக வெற்றி! ராகுல்காந்தி பிரதமராவது உறுதி! அடித்துச்சொல்லும் சித்தராமையா

 
ra

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களிலும் பாஜக 63 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.  இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க போவது உறுதியாக இருக்கிறது.   பாஜக ஆட்சியை இழந்துவிட்டது என்பது உறுதியாகி இருக்கிறது . இதனால் தான்,  ’’எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம்’’ என்று கூறி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

 காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்பதால் அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் சிவக்குமார்,   ’’மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன்’’ என்று  ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறார் .  

si

கர்நாடக மாநில தலைவர் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் , அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சருக்கு வெறும் 8000 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.  மேலும் பல அமைச்சர்களுக்கும் தோல்வி முகம்தான்.   கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளரும் தமிழக பாஜக மேல் இட பொறுப்பாளருமான சிடி ரவி வாக்குப்பதிவில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

 காங்கிரஸ் வெற்றியை  அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் காங்கிரசார் இடையே எழுந்திருக்கிறது. மோடியும் ,நட்டாவும், அமித்ஷாவும் கர்நாடகாவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும் என்று நான் சொல்லிக் கொண்டே இருந்தேன்.  அதன்படியே அவர்களது பிரச்சாரத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.  கர்நாடக மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா.

 சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த இந்த வெற்றி தான் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.   ராகுல் காந்தி பிரதமராவது உறுதி என்கிறார் சித்தராமையா.