பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் எங்களை குறை கூறுவதுதான்... கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

 
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் எங்களை குறை கூறுவதுதான் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.

கர்நாடகாவில் மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் 11 நாள் பாதயாத்திரையை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பாதயாத்திரையின்போது கோவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா உள்பட 30 பேர் மீது எப்.ஜ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரக ஞானேந்திரா

இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதற்காக 30 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநகர மாவட்ட நிர்வாகம் சட்டப்படடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டத்தை மீறும் யாரையும் நாங்கள் விடமாட்டோம் என்று  தெரிவித்தார். முன்னதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை கோவிட்-19 பரிசோதனை எடுக்கும்படி சுகாதார பணியாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் டி.கே.சிவகுமார் பரிசோதனை எடுக்க மறுத்து விட்டார்.

டி.கே.சிவகுமார்

டி.கே.சிவகுமார் இது தொடர்பாக கூறுகையில், அவர்களுக்கு கொஞ்சம் அவமானம் இருக்க வேண்டும், சுகாதார பணியாளர் என்னை பரிசோதனைக்கு உட்படுத்தும்படி கேட்கிறார், எனக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் எங்களை குறை கூறுவதுதான். நாங்கள் நேரடியாக பொறுப்பேற்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வாங்கிய லஞ்சத்துக்கு அவர்கள் நேரடியாக பொறுப்பல்லவா, நோயாளிகள் அனுமதிக்கப்படாத இடத்தில் அவர்கள் கட்டிய 10,000 படுக்கைகள் கொண்ட கோவிட் வசதிக்கு அல்லது அவர்கள் மருந்துகள்  மூலம் சம்பாதித்த பணமா? அவர்கள் பிணங்களிலிருந்தும் பணம் சம்பாதித்தார்கள் என்று தெரிவித்தார்.