பாதயாத்திரையை கைவிடுங்க.. பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க.. காங்கிரஸை வலியுறுத்திய கர்நாடக அமைச்சர்

 
அரக ஞானேந்திரா

மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பாதயாத்திரை நடத்துவரை கைவிடுங்க என்று காங்கிரஸ் கட்சியை கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட தாமதிக்கும் கர்நாடக பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று மேகதாதுவில் இருந்து பாதயாத்திரை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்து இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், காங்கிரஸார் பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதை கைவிட வேண்டும் கர்நாடக அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இது தொடா்பாக கூறியதாவது: பாதயாத்திரை அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வைரஸ் பரவலைக் குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். இரவில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கோவிட்-19 விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.