சாவர்க்கரின் பிரிக்கப்படாத இந்து கலாச்சாரத்தை உணர்ந்து கொள்வது நமது கடமை.. கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்

 
பவசராஜ் பொம்மை

சாவர்க்கரின் பிரிக்கப்படாத இந்து கலாச்சாரத்தை உணர்ந்து கொள்வது நமது கடமை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.

பெங்களூருவில் சாவர்க்கர் தொடர்பான ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை 'Savarkar- The Man Who Could Have Prevented Partition'(வீர் சாவர்க்கர் ஒரு சிறந்த தேசபக்தர்) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில் கூறியதாவது: வீர் சாவர்க்கர் ஒரு சிறந்த தேசபக்தர். தற்போதைய அரசியல் சூழலில் இந்த புத்தகம் மிகவும் பொருத்தமானது. பிரிவினை நம் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சாவர்க்கர்

அதன் தாக்கத்தை யாரும் ஆய்வு செய்யவில்லை. நமது கலாச்சாரம் பிளவுப்பட்டுள்ளது. வீர் சாவர்க்கர் நமது கலாச்சாரத்தை ஒற்றுமையை நோக்கி கொண்டு செல்ல முயன்றார். அவருடைய பிரிக்கப்படாத இந்து கலாச்சாரத்தை உணர்ந்து கொள்வது நமது கடமை. உலகமயமாக்கல், தனியார்மயம் ஆகிய சகாப்தத்திலும் நம் மனசாட்சியை எழுப்புவது நமது மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தின் மூலம் சாத்தியம் என்பதை சாவர்க்கர் காட்டினார். சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு அவர்களின் சதையில் முள்ளாக இருந்தார். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலம்

அவர் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒரு புரட்சியாளர். அவர் ஆங்கிலேயர்களுக்கு உண்மையான அணுகுண்டு. அதனால்தான் ஆங்கிலேயர்கள் அவரை இந்த நாட்டு மக்களிடமிருந்து ஒதுக்கி வைத்து காலாபானி சிறையில் (அந்தமானில் உள்ள செல்லுலார் சிறை) அடைத்தனர். பாபாசாகேப் அம்பேத்கருடன் சாவர்க்கருக்கு நல்லுறவு இருந்தது. தீண்டாமை ஒழிப்பதன் மூலம் மட்டுமே இந்து சமூகத்தில் ஒற்றுமையை அடைய முடியும் என்ற கருத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர். தீண்டாமை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தடையாக உள்ளது.