இந்திரா காந்தியின் வலுவான, தீர்க்கமான தலைமை இல்லாமல் பாகிஸ்தானை வென்று இருக்க முடியாது.. காங்கிரஸ்

 
இந்திரா காந்தி

இந்திரா காந்தியின் வலுவான மற்றும் தீர்க்கமான தலைமை இல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை நாம் அடைந்திருக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கரண் சிங் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதி நாம் வெற்றி தினமாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அண்மையில் நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டங்களின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவுகூராமல் அற்ப அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

1971 இந்தியா-பாகிஸ்தான் போர்

இந்நிலையில், இந்திரா காந்தியின் வலுவான மற்றும் தீர்க்கமான தலைமை இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்று இருக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண் சிங் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இருந்த  தற்போது உயிரோடு இருக்கும் ஒரு உறுப்பினர் கரண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி குறித்து கரண் சிங் கூறுகையில், இந்திரா காந்தியின் வலுவான மற்றும் தீர்க்கமான தலைமை இல்லாமல் இந்த வெற்றியை நாம் அடைந்திருக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் பூட்டோவுக்கு அழுத்தம் கொடுக்க இந்த வாய்ப்பை அவர் (இந்திரா காந்தி) பயன்படுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.