இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க. பொய் சொல்கிறது... கமல் நாத் குற்றச்சாட்டு

 
இடஒதுக்கீடு

மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு பொய் சொல்கிறது என கமல் நாத் குற்றம் சாட்டினார்.

உச்ச நீதிமன்றம் அண்மையில் மத்திய பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) வழங்க அனுமதி அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வரவேற்றார். மேலும், சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எனது அரசாங்கம் எடுத்தது என தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸோ, ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைத்தற்கு பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும் என தாக்கியது. 

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

இந்நிலையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ.க. சொல்கிறது என கமல் நாத் குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க. பொய் கூறியுள்ளது. மொத்தமுள்ள மாவட்ட பஞ்சாயத்துகளில், ஒ.பி.சி.கள் 98 (11.2 சதவீதம்) மட்டுமே பெற்றுள்ளனர். 

கமல் நாத்

ஜன்பத் பஞ்சாயத்தின் 313 பதவிகளில் 30 (9 சதவீதம்) பெற்றுள்ளனர். சர்பஞ்சில் (கிராம தலைவர்) 22,424 பேரில் 2,821 பேர் மட்டுமே ஒ.பி.சி.களுக்கு (12.5 சதவீதம்) வழங்கப்பட்டது. 1993ல் மாவட்ட பஞ்சாயத்துக்கு பதவிக்கு மற்ற வகுப்பினருக்கு 25  சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது. அதில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக முதல்வர் சிவ்ராஜ் கூறுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.