காப்பியடித்த கமல்; மக்களை இமயமலைக்கு போக சொல்லும் ஸ்டாலின்?!

 

காப்பியடித்த கமல்; மக்களை இமயமலைக்கு போக சொல்லும் ஸ்டாலின்?!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் படுபிசியாக உள்ளன. தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என அத்தனை பணிகளும் நிறைவுபெற்று விட்டது. இதனால் இன்று முதல் தேர்தல் பரப்புரையில் கட்சிகள் களமிறங்கவுள்ளன. அத்துடன் ஆளும் கட்சியை எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியை ஆளும் கட்சியும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் அதிமுக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார் . விழாவில் அதிமுகவின் நிர்வாகிகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி கட்சிகளான புரட்சி பாரதம், பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

காப்பியடித்த கமல்; மக்களை இமயமலைக்கு போக சொல்லும் ஸ்டாலின்?!

அப்போது பேசிய அவர் , திமுக தேர்தல் அறிக்கையில் முற்றிலும் போலியானது. ஒட்டுமொத்த நிலத்தில் 75% விவசாய நிலமாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்கள். அப்படியேயானால் மக்கள் என்ன இமயமலை, அமெரிக்கா என்று சென்று வசிப்பார்களா?

காப்பியடித்த கமல்; மக்களை இமயமலைக்கு போக சொல்லும் ஸ்டாலின்?!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாஜக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் . அது கமல் ஹாசன் போலவே புரியாத தேர்தல் அறிக்கையாக உள்ளது. படம் ஓடாவிட்டால் அமெரிக்கா செல்வேன் என்றார். அவர் அமெரிக்கா நியாபகத்தில் தான் இன்னும் கூட இருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை , தேர்தலில் மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் உண்டாக்காது” என்றார்.