திமுக தலைமையிடம் கமல் புகார்! ‘’திருமாவளவன் இப்படி செய்யலாமா?’’

 
சு

திருமாவளவன் பேசிய வார்த்தைகள் கூட்டணி கட்சியான தங்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்று திமுக தலைமையிடம் கமல்ஹாசன் தரப்பில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.  

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை திமுக கூட்டணியில் கொண்டு வந்து விட உதயநிதி ஸ்டாலின் பெரிதும் முயற்சி எடுத்து வந்தார்.  ஸ்டாலின் நேரில் சென்று பேசினால் கமல்ஹாசன் கூட்டணிக்கு ஒத்துக் கொள்வார் என்கிற தகவல் அப்போது பரவி வந்தது .     கடைசி வரைக்கும் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் வந்து விடுவார் என்றே பேச்சு இருந்தது.  ஆனால் கமல்ஹாசன் தனியாக கூட்டணி அமைத்தார்.  அந்த தேர்தலில் கமலஹாசனும் தோல்வி அடைந்தார்.

உ

 இதனால் மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து  முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறினார்கள்.   அதில் சிலர் திமுகவில் இணைந்து இருக்கிறார்கள்.  அதன் பின்னர் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் , உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து திரைப்பட விநியோகத் துறையில் வேலை செய்து வருகிறார்.  இதன் மூலம் உதயநிதியிடம் ஏற்பட்ட நல்ல பழக்கவழக்கத்தினால் திமுகவில்  மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணியும் உறுதியானது.

 இந்த கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகத் தான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று அவருடன் டெல்லியில் பாதயாத்திரை சென்ரார் . ராகுல் காந்தி உடன் சிறப்பு உரையாடல் பங்கேற்றார் கமல்ஹாசன்.  

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியாக திமுக கூட்டணிக்குள் மக்கள் நீதி மையம் கட்சி சென்றது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதியில் இடைத்தேர்தல் வந்து விட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமா? இல்லை தனித்துப் போட்டியிடுமா? என்ற நிலை இருந்தது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்  அடுத்து இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

வ்

 திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் கமல்ஹாசன் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து செயல்படுவார் என்று உறுதியாகி இருக்கிறது.

 இந்நிலையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்தது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  கமல் இணைந்தது ஓட்டு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை.  நாங்கள் பேசுகிற கருத்துகளுக்கு வலு சேர்க்கும் என கூறி இருக்கிறார். திருமாவளவன் சொன்ன இந்த வார்த்தைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.  இதனால் மக்கள் நீதி மய்யத்தின்  மாநில முக்கிய நிர்வாகி ஒருவர் திருமாவளவன் பேசியது தங்களை காயப்படுத்தி இருப்பதாக திமுக மேலிடத்திலும் புகார் வாசித்திருக்கிறார்.