அகிலேஷ் யாதவ் ஆட்சியில் குண்டர்கள் மற்றும் மாபியாக்கள் ராஜ்யம் இருந்தது... ஜே.பி. நட்டா தாக்கு

 
ஜே.பி. நட்டா

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் குண்டர்கள் மற்றும் மாபியாக்கள் ராஜ்ஜியம்  இருந்தது என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக தாக்கினார்.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு உத்தர பிரதேச வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளில் அனைத்தும் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க. அம்மாநிலத்தில் மக்கள் நம்பிக்கை யாத்திரை நடத்தி வருகிறது. அம்மாநிலத்தில் ஹாபூரில் பா.ஜ.க.வின் மக்கள் நம்பிக்கை யாத்திரை நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். 

அகிலேஷ் யாதவ்

அந்த யாத்திரையில் ஜே.பி.நட்டா பேசுகையில் கூறியதாவது:  நம் அகிலேஷ் பாய் சில சமயங்களில் யாத்திரைக்கு செல்வார், சில சமயங்களில் தனிமைப்படுத்தப்படுவார். இது அவருடைய புரளி யாத்திரை. அவரே சுதந்திரமானவர் ஆனால் அவரது மக்களும் ( ஆதரவாளர்கள் அல்லது கட்சியினர்) அமைச்சர்களும் சிறையில் உள்ளனர். அகிலேஷ் யாதவ் ஆட்சியில் குண்டர்கள் மற்றும் மாபியாக்கள் ராஜ்ஜியம்  இருந்தது. ஆனால் முழுமையான வளர்ச்சி மற்றும் சமத்துவததில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். 

லேப்டாப்

அகிலேஷ் யாதவ் ஆட்சியில் 700 கலவரங்கள் நடந்தன. அவரின் (அகிலேஷ் யாதவ்) வார்த்தைகளும், செயல்களும் ஒரு போதும் ஒத்துப்போவதில்லை. அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது 15 தீவிரவாதிகளின் வழக்குகளை வாபஸ் பெற்றார், நீதிமன்றம் அதற்கு எதிராக இருந்தது. அகிலேஷ் ஆட்சியில் இருந்தபோது 15 லட்சம் லேப்டாப்களை வாங்கினார். ஆனால் 6.5 லட்சம் லேப்டாப்களை மட்டுமே விநியோகம்  செய்தார். மீதி லேப்டாப் எங்கே போனது?இவ்வாறு அவர் தெரிவித்தார்.