உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்... அப்னா தளம், நிஷாத் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்த பா.ஜ.க.

 
பா.ஜ.க.

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அப்னா தளம் மற்றும் நிஷாத் ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க., அப்னா தளம் மற்றும் நிஷாத்  ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி உறுதியானது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல் மற்றும் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பில் ஜே.பி.நட்டா பேசுகையில் கூறியதாவது:  உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சி இணைந்து 403 தொகுதிகளில்  போட்டியிடும்.

பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள்

முந்தைய அரசாங்களுடான உறவில் உத்தர பிரதேசத்தில் மாபியா செயல்பட்டது. இப்போது மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி உள்ளது. பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின்கீழ், உத்தர பிரதேசம் முதலீட்டுக்கான இடமாக மாறியுள்ளது. சமூக குறிகாட்டிகளில் மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க., அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சி ஆகியவை தொகுதி பங்கீடு குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை.

ஜே.பி. நட்டா

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி, சமாஜ்வாடி கூட்டணி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என 5 முறை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தேர்தலை பொறுத்தவரை  பா.ஜ.க. கூட்டணிக்கும், சமாஜ்வாடி கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும் பேசப்படுகிறது.