கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும் உள்ளன.

குஜராத், தெலங்கானா, ஹரியானா உள்பட பல மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிரா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும்.

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி
பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. அதனால் இந்த 2 தொகுதிகளில் ஒரே வேளை பா.ஜ.க. தோற்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆகையால் இந்த இடைத்தேர்தல் பா.ஜ.க.வுக்கு வாழ்வா, சாவா என்ற நிலை கிடையாது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ.க. அரசுக்கு கூடுதல் பலம்.

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி
குமாரசாமி

அதேசமயம் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி தலைவரான மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நெருக்கடியான நிலையில் உள்ளன. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே கட்சிக்கு மரியாதை என்ற நிலையில் அவை இருக்கின்றன. இதனால் அந்த 2 கட்சிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிரா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கிட்டத்தட்ட வேட்பாளர்களை இறுதி செய்து விட்டதாக தகவல். இதனால் வரும் நாட்களில் அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கி விடும்.