“திட்டமிட்டு ஓபிஎஸ்-ஐ அவமதித்தனர்; அவர் பேசும்போது மைக்கை ஆப் செய்தனர்”

 
ops

“திட்டமிட்டு ஓபிஎஸ்-ஐ அவமதித்தனர்; அவர் பேசும்போது மைக்கை ஆப் செய்தனர்”நேற்றைய தினம் சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவடைந்தது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் கோசங்கள் எழுப்பியதோடு கையில் கிடைத்த பொருட்களுடன் தாக்க முயற்சி செய்ததை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு முடிவதற்குள் புறப்பட்டு சென்றார். மேலும் எவ்வித தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். 

JCD Prabhakar (@JCDPrabhakar) / Twitter

பொதுக்குழுவில் ஏற்பட்ட தகராறும் சலசலப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் மூத்த வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் தலைமையிலான வழக்கறிஞர் குழு டெல்லி புறப்பட்டு சென்றது.  இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆன்லைன் வாயிலாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், புகார் மனுவில் ஜூன் 23ம் தேதி நடைபெற்ற "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்" பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும்; மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமான என்னுடைய எவ்வித ஒப்புதலும் இல்லாமல் ஜூலை மாதம் 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என  அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதேபோல் கட்சியின் சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கட்சியின் அவைத் தலைவராக 'தமிழ்மகன் உசேன்' நியமனம் செய்யப்பட்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அவைத்தலைவர் அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த உடன்பாடும் இல்லை எனவும் அறிவிப்பில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னுடைய கையெழுத்து கூட இடம்பெறவில்லை என அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர், “பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ பன்னீர்செல்வத்தை அவமதித்தனர். ஓ பன்னீர்செல்வம் பேசியபோது பாதியில் மைக்கை ஆப் செய்தனர். ஒற்றை தலைமை என ஏற்கனவே கூறியதை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் கட்சிகள் அல்ல. அது தொண்டர்களின் கட்சி. நிர்வாகிகள் பழனிச்சாமி பக்கமும், தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கமும் உள்ளனர்திமுகவில் ஒற்றை தலைமைக்கு இடம் இல்லை ஏற்கனவே எடப்பாடி தெரிவித்திருந்தார்.14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினருக்கு அனுமதி இல்லை என்பது குறித்து பேச தான் அனைவரையும் அழைத்தனர். ஆனால் மாதவரம் மூர்த்தியை பேச எடப்பாடி அனுமதித்தார். அப்போது நான் பேச முயன்ற போது ஓபிஎஸ் வேண்டாம் என்றார். அதனால் பேசாமல் இருந்தேன். அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கால்  ஏற்றுக்கொள்ளப்பட்டு தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமரியாதை செய்யப்பட்டார்.

குறைந்த பட்சம் இணை ஒருங்கிணைப்பாளர் பாட்டில் வீசியது தவறு. கட்சிக்காக பலவற்றை ஒபிஎஸ் விட்டு கொடுத்துள்ளார். கட்சி பிளவுபடுவதை ஓபிஎஸ் விரும்பமாட்டார்.தேர்தல் ஆணையத்தில் ஒபிஎஸ் தரப்பில் இருந்து எந்த புகாரும் அளிக்கவில்லை.தீர்மானத்தை பொதுக்குழுவில் படிக்காமலே அதை புறக்கணிப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.இது யார் மீதோ உள்ள கோபத்தை வெளிகாட்டியுள்ளார். தொண்டர்கள் ஏற்றுகொள்ளாத ஒரு பொதுக்குழு தான் நடைபெற்று முடிந்துள்ளது.அதிமுகவில் தற்போது சர்வாதிகார போக்கு நிலை இல்லை.மாறாக பதவி வெறியுடன் உள்ளனர்.பொதுக்குழுவுக்கு பின் ஒபிஎஸ்ஸின் மரியாதை மேலும் உயர்ந்துள்ளது.” எனக் கூறினார்.