ஜெயலலிதாவின் தங்க-வைர நகைகள் யாருக்கு?- கர்நாடகாவில் ஜெ.தீபா சட்ட போராட்டம்

 
ஜ்

கர்நாடக மாநிலத்தில் அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க ,வைர நகைகள், பட்டுப் புடவைகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை ஏலம் விடக்கூடாது . அவற்றை வாரிசு ஆன தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடகாவில் சட்டப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார் ஜெ. தீபா.

ஜ்

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் பெங்களூர் தனி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த மேல்முறையீட்டில் நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 கர்நாடக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  கடந்த 2017 ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  ஜெயலலிதா அப்போது மரணம் அடைந்து விட்டதால் அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் இந்த தீர்ப்பின்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்காண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

ஜ்ஜ்

சொத்துக்குவிப்பு புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு  அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தி தங்க, வைர நகைகள் , விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.   இந்த பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டதை அடுத்து இந்த பொருட்களை ஏலம் விடுவதற்காக அரசு சிறப்பு வழக்கறிஞரை அண்மையில் நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

டெ

  இந்த பொருட்கள் விரைவில் நிலத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது.  இந்த நிலையில்  கர்நாடகாவின் அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின்  கோடிக்கணக்கான சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்திருக்கிறார்.  ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை ஏற்றுக்கொண்டு பல்வேறு சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.  அதனால் கர்நாடகாவின் கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களையும் தன்னிடம் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைகளின் நகலையும் மனுவோடு இணைத்து ஜெ தீபா தாக்கல் செய்திருக்கிறார் . வரும் 26 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.