ஜெ., அரசியல் ஆலோசகர் ராவணன் இறுதிச்சடங்கு

 
ra

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ராவணன் காலமானார்.   சசிகலாவின் உறவினரான இராவணனுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இன்று ராவணன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

sa

சசிகலாவின் உறவினரான  ஆர். பி. ராவணன் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்  திருச்சியில் மருத்துவ உயர்கல்வி பயின்று வந்த தனது மகன் அரவிந்துடன் தங்கியிருந்து உதவி புரிந்து வந்துள்ளார் .  இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். 

சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன் தான் ராவணன்.   கோவையில் தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த ராவணன் அதிமுகவில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்த போது அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.   ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கி வந்தார்.  

rav

 திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அடுத்த ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர். பிச்சைக்கண்ணு வாண்டையாரின் மகனான ராவணனுக்கு ஒரே மகன் அரவிந்த்.  இவர் திருச்சியில் மருத்துவ உயர்கல்வி படுத்து வருகிறார்.   அவருடன் தங்கி இருந்தத நிலையில் தான் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

 ராவணன் மறைவுக்கு விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன்,  அதிமுக, அமமுக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராவணனின் இறுதிச் சடங்குகள் இன்று அவரின் சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த ராதா நரசிம்மபுரம் கிராமத்தில் நடைபெற நடைபெறுகிறது.