இன்னைக்கு பாஜகவுக்கு நடந்தது நாளை எங்களுக்கு நடக்கலாம் - ஜெயக்குமார்

 
jayakumar

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுக அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடுவார்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார். 

கருணாநிதி திமுக பிரசாந்த் கிஷோர் திமுக ஆகிவிட்டது"- அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி! | nakkheeran

சென்னை திரு-வி-க நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட 71 மற்றும் 72வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கன்னிகாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “திமுக வாக்கு சேகரிப்பில் மக்களிடையே ஆதரவு இல்லை, ஆட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் ஏற்படும். சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை, கேஸ் மானியம், ஆயிரம் ரூபாய் வாக்குறுதி என்ன ஆனது. சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு என்ன நிதி உதவி செய்தார்கள்? இவற்றையெல்லாம் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் மக்களை நேரிடையாக சந்திக்க முடியாத முதலமைச்சர் காணொளி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலில் செங்கல் எடுத்துக் கொண்டு பரப்புரை செய்தார், இப்போது மக்கள் கேள்வி கேட்பதாகவும், தேர்தல் பரப்புரை விதிகளை உதயநிதி மீறுகிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் வன்முறை கலாச்சாரம் இருக்க கூடாது. பா.ஜ.க அலுவலகம் பெட்ரோல் குண்டு வீச்சு கண்டிக்கதக்கது. இவ்விவகாரத்தில் காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாமல் உள்ளது. இதில் சரியான நடவடிக்கை இல்லை எனில் நாளை அதிமுக அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடுவார்கள். எனவே காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் என்.ஐ. ஏ விசாரணை கோருகின்றனர். நெடுஞ்சாலையில் இருக்கும் ஒட்டல்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர். அதனால் தான் உணவகம் மீது நடவடிக்கை இல்லை. முதுநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்வு எழுத கல்வித் துறை கட்டாயப்படுத்துவது சிரமத்தை ஏற்படுத்துவதுபோல் உள்ளது” எனக் கூறினார்.