அண்ணாமலை விளக்கம் அளிக்க அதிமுக கெடு- ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுகவை பாஜக பொருளாளர் விமர்சித்தது அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? இல்லையா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

jayakumar

சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை பாஜக பொருளாளர் விமர்சித்தது அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? இல்லையா? என ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை விளக்கம் தரவேண்டும். பாஜக பொருளாளரை கண்டிப்பதாக அண்ணாமலை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அண்ணாமலை தூண்டுதலின் பேரில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அதிமுகவை விமர்சித்தாரா? பாஜகவினர் அதிமுகவை விமர்சித்தது அண்ணாமலை சொல்லி நடக்குதா, சொல்லாமல் நடக்குதா?

பாஜகவினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க அதிமுகவினருக்கு தெரியும். வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம். பாஜகவினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லாதையே ஐது காட்டுகிறது. பாஜகவினரை அண்ணாமலை அடக்கி வைக்க வேண்டும்” என்றார். 

அமித்ஷாவை அதிமுக நிர்வாகிகள் சந்தித்த பிறகும் அதிமுக- பாஜகவினர் இடையே மோதல் தொடர்கிறது. 25 சீட் கொடுத்தால் கூட்டணி இல்லையெனில் இல்லை என பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.