கட்சியை வளர்க்க ஆயிரம் பேசிக்கோங்க.. ஆனா அதிமுகவை சீண்டாதீங்க - ஜெயக்குமார் கண்டனம்...

 
அமைச்சர் ஜெயக்குமார்


பாஜக தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ள ஆயிரம் பேசிக்கொள்ளலாம் என்றும் அதற்காக அதிமுகவை சீண்டிப் பார்க்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது,  பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ``சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை.. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்புகிறார்.. " என கடுமையாக விமர்சித்திருந்தார்.  நயினார் நகேந்திரனின் இந்தப் பேச்சு அதிமுகவில் பெரும் சபசப்பை ஏற்படுத்தியது.

“லேசான கொரோனா அறிகுறி தெரிகிறது, கந்த சஷ்டி கவசத்தோடு கிளம்புகிறேன்”… நயினார் நாகேந்திரன் பரபரப்புத் தகவல்!

அதிமுகவைச் சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து  கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.  இந்த சம்பவம் பெரும் பேசுபொருளானதை அடுத்து, நயினார் நாகேந்திரன் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில்  பதிவிட்டிருந்த அவர், “ அதிமுகவைப் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம்  நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நயினார் நாகேந்திரனின் ட்வீட், கிட்டத்தட்ட மன்னிப்பு கோருவது மாதிரிதான், ஆனாலும் இது கண்டனத்திற்குரிய விஷயம் தான் என தெரிவித்திருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பது அவருக்கே புரியவில்லை என்றும், அரசியலில் கூட்டாணி தர்மத்தை பாதுக்காக்க வேண்டியது நல்லது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசு ஊழியர்களை அச்சுறுத்த நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல: அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக கட்சியை வளர்க்க ஆயிரம் பேசிகொள்ளட்டும்.. ஆனால் அதிமுகவை சீண்டிப் பர்க்க கூடாது  என்று தெரிவித்தார். மேலும் அப்படி அவர்கள் அதிமுகவை சீண்டினால் பதிலுக்கு நாங்களும் சீண்டும் நிலை ஏற்படலாம் என்று எச்சரித்திருக்கிறார்.  மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.