உணவு பொருட்களுக்கு வரி விதிப்பது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும், இது மோடி அரசின் கொடூரம்... காங்கிரஸ்

 
காங்கிரஸ்

சில அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி விதிப்பது ஏற்கனவே உயர்ந்த பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும், இது மோடி அரசின் கொடூரம் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இன்று (நேற்று) காலை மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள்  விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீதான அர்த்தமற்ற ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறித்து அவசர விவாதம் நடத்த கோரியது. இது மறுக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் பிடிவாதம் தொடர்கிறது. நாடாளுமன்றத்தில் அலுவல் பாதிக்கப்பட்டது.

ஜெய்ராம் ரமேஷ்

சில அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி விதிப்பது அல்லது வரியை அதிகரிப்பது ஏற்கனவே உயர்ந்த பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும், இது மோடி அரசின் கொடூரம்.  ஏழைகள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் அதிக சுகாதாரமாக பேக் செய்யப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆசையை அரசாங்கம் தடுத்துள்ளது. ஏழை நுகர்வோர் ஏன் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களை ஏன் வாங்க விரும்பக்கூடாது?.

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதத்துக்கு அதிகமாகவும், மொத்த விலை பணவீக்கம் 15 சதவீதத்துக்கும் மேலாகவும், வேலையின்மை விகிதம் அதிகமாகவும் மற்றும் ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது மற்றும் உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த சூழ்நிலையில் வரி விகிதங்களை உயர்த்துவது கொடூரமானது. ஏழை நுகர்வோர் ஏன் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களை ஏன் வாங்க விரும்பக்கூடாது என பதிவு செய்துள்ளார்.