ஆடு பில்லு தின்னுடுச்சு போல.. டிஆர்பி ராஜா வெளியிட்ட வீடியோ

 
aa

அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்சுக்கு பில் இருக்குதா? என்று கேட்டிருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.  அதற்கு, பில் இருக்குது. விரைவில் வெளியிடுவேன் என்று சொல்லி இருந்தார் அண்ணாமலை.

se

பில் இருந்தால் உடனே காட்ட வேண்டியதுதானே? விரைவில் வெளியிடுகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இனிதான் தயாரிக்க வேண்டுமா? என்று அமைச்சர் கேட்க,  ஏப்ரல் முதல் வாரத்தில் பில்லை வெளியிடுவேன்.  அதனுடன் சேர்த்து  திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துகுவிப்பு பட்டியலையும் வெளியிடுவேன் என்று சொன்னார்.

பின்னர்,  ஏப்ரல் 14ம் தேதி பாத யாத்திரை மேற்கொள்வேன்.   அன்றைய தினம் வாட்ச் பில்லையும்,  திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்.  திமுகவினர் முன்னுரை எழுதிட்டாங்க.  நாங்க முடிவுரை எழுதப்போறோம் என்று சொல்லி இருந்தார் அண்ணாமலை.

b

ஆனால், ஏப்ரல் முதல் தேதியான இன்றைய தினமே,  #பில்லு_எங்க_ஆடு ? என்று கேட்க ஆரம்பித்து விட்டனர் திமுகவினர்.  இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.    ஏப்ரல் 1 ஆச்சு! அண்ணாமலை வாட்ச்சு பில் என்னாச்சு? என்றும் திமுகவினர் கேட்டு வருகின்றனர்.

இதற்கு,  ஏப்ரல் 14 ம் தேதிக்கு இனியும் நாட்கள் உண்டு என்று தெரியாதா கொத்தடிமை??இன்னிக்குதானே ஏப்ரல் மாசம் பொறந்துருக்கு.  அதுக்குள்ள இப்டி ஊரே ஒன்னுகூடி வாட்ச் பில் கேட்டா என்னங்க அர்த்தம்...? ஆத்திரப்பட்டு வருகின்றனர் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

#பில்லு_எங்க_ஆடு ? என்ற கேள்விக்கு,  பில்லு  தின்னுடுச்சு போல.. என்று ஆடு பேப்பரை தின்னும் வீடியோ போட்டிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. டிஆபி ராஜா.