இப்போ அதை அரசியலாக்குவது தவறு -அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்

 
ga

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சின்னச்சாமி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதை நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

p

 ஒரு ராணுவ வீரரை கொல்வது தீவிரவாத செயலுக்கு சமம். திமுக கவுன்சிலர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 33 வயது ராணுவ வீரர் ஸ்ரீ.பிரபு வாழ தகுதியானவர். அவர் நம்முடைய எல்லை கடவுள்.  அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்.  அரசியல் கட்சியை தவறாக பயன்படுத்த வேண்டாம். பதவியை தவறாக பயன்படுத்த வேண்டாம். இதுபோன்ற செயல்களை நாடு மன்னிக்காது. இதுபோன்ற செயல்களை அரசு மன்னிக்காது. இதுபோன்ற செயல்களை தமிழ்நாட்டின் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்திருந்தார் நடிகை காயத்ரி ரகுராம்.

அதே நேரம் தமிழக பாஜகவில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் கிருஷ்ணகிரியில் பிரபுவின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்தும்,  திமுக கவுன்சிலர் சின்னச்சாமியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிவருவதை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

vv

தமிழக பாஜக தலைவரின் தவறான செயல்களை மறைக்க இந்த பிரச்சினையை போராட்டத்திற்கு பயன்படுத்துவது தவறானது.  ராணுவ வீரர்  பிரபுவை கொன்ற கும்பல் மீது உடனடி நடவடிக்கை எடுத்தத காவல்துறைக்கு நன்றி .

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.  இப்போ அதை அரசியலாக்குவது தவறு .  குடும்பத்திற்கு அரசு வேலையும், அவரது மனைவி பிரியா மற்றும் குழந்தைக்கு 1 கோடி இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று முதல்வரை  கேட்டுக்கொள்கிறேன்  .  ஆனால் ஒட்டுமொத்த குண்டர்களும் சுதந்திரமாக இயங்குகிறார்கள், தமிழகத்திற்கு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு கடுமையா இருக்க வேண்டும்.

தேசிய செய்தி சேனல்களில் அண்ணாமலை பேச வேண்டும், தனது கெட்டப் பெயரைத் மறைக்கவே, இந்த சம்பவத்தை எடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தேசிய சேனல்களில் கொண்டு வந்துள்ளார்.. தவறு..  போலீஸ் தேவையானதைச் செய்கிறது. காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீது எல்லாம் பழி சுமத்துவது தவறு என்கிறார்.