சீமான் அப்படி பேசியது வேதனைக்குரியது -திருமா வருத்தம்

 
see

ஆரிய வந்தேறிகள் என்று பேசிய இந்த மண்ணில் அருந்ததிய வந்தேறிகள் என்று சீமான் பேசியிருப்பது வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.    அவர் மேலும்,  மனித குல வாழ்க்கையில் மனிதன் புலம்பெயர்ந்து கொண்டே இருப்பான்.  எந்த உள்நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.  படையெடுப்பது என்பது வேறு புலம்பெயர்வது என்பது வேறு.   மார்வாடிகள் , ஆரியர்களை நாம் வந்தேறிகள் என்று அதிகமாக சொல்வதில்லை. புலம்பெயர்ந்து வந்தவர்களில் அருந்ததியர்கள் மட்டும் தூய்மைப் பணிகள் செய்பவர்களா? அப்படி குறிப்பிடுவது இனவாதத்தின் உச்சம் என்கிறார்.

ts

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது , அருந்ததிய சமூகத்தை வந்தேறிகள் என்று குறிப்பிட்டார்.   சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அருந்ததியர் சமூகம் அதிகம் உள்ள பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றபோது ,  எந்த முகத்தை வைத்துக்கொண்டு எங்களிடம் வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் என்று விரட்டி அடித்தார்கள். 

 சீமானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் தமிழ் புலிகள் அமைப்பினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நெல்லை உட்பட தமிழகத்தில் பல இடங்களிலும் சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.   இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  சீமான் அப்படி பேசியதை தவறு என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.