திமுக அரசு இனியும் ஆட்சியில் இருக்க முடியாது என்பது உறுதி -எச்.ராஜா

 
h

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும்,  ஸ்டாலின் மருமகன் சபரீசனும் ஒரே வருடத்தில் அதிக பணம் சம்பாதித்து விட்டார்கள்.  இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை என்று தமிழக நிதி அமைச்சர் டெல்லியில் உள்ள  பத்திரிகையாளரிடம் பேசுவதாக ஒரு ஆடியோ கடந்த புதன்கிழமை இரவு முதல் வைரலாகி வருகிறது. 

u

 பாஜகவினர் இந்த ஆடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வியாழக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்திருக்கிறார்.   தமிழக நிதி அமைச்சர் ஒரு பத்திரிக்கையாளர் உடனான உரையாடலில் தமிழக முதல்வரின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி குளித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.  தினம்தோறும் திமுக பைல்சில் நாங்கள்  கூறியுள்ளவற்றை இவை உறுதிப்படுத்துகின்றன என்று கூறி இருக்கிறார்.

 சபரீசன் பண மோசடி செய்திருப்பதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் அண்ணாமலை திமுக பைல்சில் அம்பலப்படுத்தி இருந்தார்.  உதயநிதி ஸ்டாலின் பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிசில் யார் யார் முதலீடு செய்துள்ளார்கள் என்கிற விவரங்களையும் அண்ணாமலை கூறியிருந்தார்.   இதை அடுத்து உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

p

 இந்த நிலையில் பிடிஆர் ஆடியோ வெளியாகி இருப்பதால் அவர் மீதும் உதயநிதியும் சபரீசனும் அவதூறு நோட்டீஸ் அனுப்புவார்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.

இந்நிலையில், ல்டாலின் மகனும், மருமகனும்  30000 கோடி ஊழல் பணம் வைத்துள்ளது பிரச்சினையாக உள்ளது என்கிற உறுதி செய்யப் படாத பிடிஆர் ஆடியோ வந்துள்ளதாக செய்தி உலா வரும் நேரத்தில் அவரது பதவி பறிக்கப் படுமானால் மக்கள் அச்செய்தி உறுதி என நம்புவார்கள் என்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.  அவர் மேலும், தமிழக நிதி அமைச்சர்,  ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30000 கோடி ஊழல் செய்துள்ளதாக கூறியுள்ளது திமுக அரசு  இனியும் ஆட்சியில் இருக்க முடியாது என்பது உறுதி என்று அழுத்தமாக சொல்கிறார்.