ஆறு தூங்குகிறதா? கொள்ளிக்கட்டையை ஆற்றிலே விட்டுப்பார்த்த அதிமேதாவி!

 
rrajk maytj

திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது திமுகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.  திமுகவின் தலைவர் தொடங்கி கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என்று பலரும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பிரபல திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   

அது இது என்றும் அவர் ஆளுநரை விளாசி எடுத்திருக்கிறார்.  திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் இந்த கண்டனம் வெளிவந்திருக்கிறது.   ’என் இனிய தமிழ் சொந்தங்களே..’ என்று தொடங்கி இருக்கிறார் குருநாதன். 

rr

 அந்த கண்டனத்தில்,   நம் மாநிலத்தின் ஆட்டுத்தாடி சர்வ சாதாரணமாக திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று பேசி இருக்கிறது.  ஆறு தூங்குகிறதா என்பதனை பரிசோதிப்பதற்காக கொள்ளிக்கட்டையை ஆற்றிலே விட்டுப் பார்த்த அதிமேதாவியின் கதை ஆட்டுத்தாடிக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.  அவரின் கூற்றுப்படி திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்றால்,  அவர் சார்ந்துள்ள இயக்கத்தின் இந்துத்துவா கொள்கை என்ன இன்று காலை மலர்ந்த புரட்சி பூவா? இவர்கள் சொல்லுகின்ற ராம ராஜ்ஜியம் என்ன மக்களாட்சியின் மகத்துவம் சொல்லும் சாதி மதங்கள் அற்ற சமத்துவ மலரா? என்று சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 தமிழ்நாட்டைச் சுற்றி இருந்த நச்சரவமான ஆரிய வலையை அருத்தெறிந்து சமூக நீதி படைத்திட்ட திராவிடக் கொள்கைகள் மானுட வாழ்க்கை இப்புவியில் இருக்கும் வரை தொடர வேண்டிய சாகா வரம் பெற்றது.  அதன் மகத்துவத்தை மற்ற மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றிலே புளியை கரைத்து இருப்பது போலவே ஆட்டுத்தாடிக்கும் ஆட்டத்தை தந்து இருப்பதால்தான் தன் எல்லைகளை மீறி கருத்து சொல்வதாக நினைத்து தன் முகத்தில் தானே கரியை அள்ளி பூசி கொள்கிறது. 

g

 இவர்கள் பேசிய அரசியல் போதும் என்று நினைப்பதாலோ இவர்கள் தொடர்ந்து அரசியல் பேசினால் நமது மானம் மரியாதை சந்தைக்கு வந்துவிடும் என பயந்து தான் சில பேரை கவர்னர் பதவியை கொடுத்து ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.  வேகாத பண்டங்களை வெள்ளித்தட்டிலே வைத்து கொடுக்கிற மாதிரி தான் இந்த ஆட்டுத்தாடி பதவியும்.  அதை புரிந்து கொள்ளாமல் நமக்கு தெரியாததை எல்லாம் பேசி எதுக்காக இந்த ஆளு மாநில மக்களோட வயிற்று எரிச்சலை சம்பாதித்துக் கொள்கிறார் என்பது எனக்கு புரியவே இல்லை என்கிறார்.

திராவிட கொள்கை காலாவதி. உங்கள் கொடி சரியில்லை. மொழி சரியில்லை ;முகம் சரியில்லை.  இந்த விமர்சனம் எல்லாம் உங்களுக்கு எதற்கு? அதை எல்லாம் சொல்வதற்கு தான் அண்ணாமலையார் தலைமையில் ராஜாக்கள்,  நாராயணன்கள்,  பாண்டேக்கள் ,  ஆடிட்டர்கள்,  ரமேஷ் இப்படி ஒரு படையே இருக்கிறது. 

 பறக்கிற பறவைக்கு எல்லாம் இரை தரையில தானே கிடைக்குது.  அப்புறம் ஏன் அது கஷ்டப்பட்டு ஆகாயத்தில் பறக்கணும்? பறக்கிறது கூட பரவாயில்லை என்று வேடிக்கை பார்க்கலாம்.   ஆனால் அப்படி இப்படி தேவையில்லாமல் நம்ம தலையில எச்சம் போட்டா எத்தனை நாளைக்கு தான் நம்ம மக்களும் சும்மா இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

 ஆட்டத்தாடி என்று  அண்ணா சொன்னாரு.   ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி என்று எழுதியிருக்கிறார் . ஒரு கவிஞர் இப்பவாவது புரியுதா ஜெய்சங்கர் ஒன்றிய அமைச்சர் . ஆனால் நீங்க வரும் ரப்பர் ஸ்டாப் ஏன் காலாவதி என்ற வார்த்தையை எங்க பயன்படுத்தனும்னு ஒட்டுமொத்த இந்திய மக்களும் 2024 ஆம் ஆண்டு ஏக இந்தியாவும் திராவிட அரசியலை ஏற்றுக்கொண்டு வாக்களித்த பின்னால் சொல்ல வேண்டிய இடத்தில சொல்லுங்க . இப்ப சொல்லி திராவிட நீரோட்ட ஆற்றில் கொள்ளிக்கட்டையை சொருகி ஆறு தூங்குதா பரீட்சை வச்சு பார்க்க நினைக்காதீங்க விளைவுகளை தாங்க உங்களால முடியாது என்று எச்சரிக்கிறார்.