சரத்குமார் சொன்ன அந்த ‘தனிமனிதர்’ சூர்யாவா?

 

சரத்குமார் சொன்ன அந்த ‘தனிமனிதர்’ சூர்யாவா?

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தேசிய அளவில் விவாதப்பொருளானது. அது போலவே, தற்போது நீட் தேர்வுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்தும் தேசிய அளவில் விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் , பத்திரிகைகளிலும் சூர்யாவின் கருத்து பற்றிய பேச்சாகவே இருக்கிறது. சூர்யாவின் கருத்து குறித்து பாமரர்கள் முதல் பிரபலங்கள வரை பலரும் தங்களது தரப்பு கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

சரத்குமார் சொன்ன அந்த ‘தனிமனிதர்’ சூர்யாவா?

சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு இருக்கும் அதே வேளையில் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ஆதரவு – எதிர்ப்பு என்று எப்படிப்பார்த்தாலும் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா சொன்னதுதான் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது.

இந்நிலையில், நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார், ’’ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அவரவர் கருத்துகள் அவரவர் எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடு. அந்த வகையில், தனிமனிதர் கூறும் கருத்துகளுக்கு பதில் கருத்தை கேட்டு பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடமும், நடிகர்களிடமும், பிற அமைப்பினரிடமும், தொழிலதிபர்களிடமும் கருத்து கேட்பதும், தொலைக்காட்சிகளில் விவாதம் செய்வதும், சமூக வலைத்தளங்களில் அக்கருத்தை மாபெரும் விவாதப் பொருளாக்கி நேர்,எதிர் கருத்துகளை பேசி வருவதும் மக்களுக்கு எந்தவகையில் பயனளிக்கக்கூடிய தகவல் என தெரியவில்லை. ஏன் அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமான சிந்தனை, செயல்பாடுகளில் பயன்படுத்தக்கூடாது என தோன்றுகிறது.

சரத்குமார் சொன்ன அந்த ‘தனிமனிதர்’ சூர்யாவா?

தனிமனித கருத்தை சமூக வலைதளங்களில் விவாதிப்பது தவறல்ல, ஆனால் கொரோனா சமயத்தில் நாடு அடைந்திருக்கும் பொருளாதார பின்னடைவு, தனி மனித வாழ்வாதார பாதிப்பு, வேலையிழப்பு, வணிகம், தொழில் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான கருத்துகளையும், பொருளாதார உயர்வுக்கான வழிகளையும் துறைசார் வல்லுனர்கள், தனித்துவமான சிந்தனை கொண்ட இளைஞர்கள் முன்னேற்றத்திற்கான கருத்துகளை இதுபோன்று தீவிரமாக பதிவு செய்து விவாதித்தால் சிறப்பாக இருக்கும்’’என்று அறிக்கையில் தெரிவித்திருப்பதால், சரத்குமார் சொல்லும் அந்த தனிமனிதர் ‘சூர்யாவா?’என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

  • கதிரவன்