எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கையெழுத்து செல்லாதா? இபிஎஸ் கையெழுத்துதான் செல்லுமா?

 
ம்

இதற்கு மேலும் பொறுக்கலாமா? திருச்சி அழைக்குது புறப்படலாமா? என்று ஆத்திரப்படுகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.   அவரின் ஆத்திரத்திற்கு காரணம் அதிமுக மாவட்ட செயலாளர் துளசிமோகன் பேசிய பேச்சுதான்.

எ

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆன துளசி மோகன் பேசியது தான் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பதவி வகித்து  வந்தார்கள் . தற்போது மூன்றாவது பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.   முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோர் கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டைகள் வைத்திருப்பீர்கள் என்றால் தற்போது அந்த உறுப்பினர் அட்டைகள் செல்லாது.  பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பதவி வழங்கப்படும்.  எதிர்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு சங்கங்கள் எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டை அவசியம் . அதனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கின்ற அவர்களும் மீண்டும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார் .

த்

கட்சியை  தொடங்கி வளர்த்த எம்.ஜி.ஆர், ம் அதன்பின் கட்சியைத் வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோர் வழங்கிய உறுப்பினர் அட்டை செல்லாது என்று தூசிமோகன் பேசி இருப்பது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.  இந்த நிலையில் தான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார் ஓ. பன்னீர்செல்வம். வரும் 24ஆம் தேதி அன்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார் ஓபிஎஸ்.  

ம

தூசிமோகன் சொன்ன வார்த்தைகளில் ஆத்திரமடைந்த மருது அழகுராஜ்,    இதற்கு மேலும் பொறுக்கலாமா? திருச்சி அழைக்குது புறப்படலாமா? என்று தொண்டர்களை பார்த்து கேட்கிறார்.