ஜெயலலிதா ஆம்பளயா? சசிகலா ஆம்பளயா? இபிஎஸ் ஆதரவாளர்களிடம் சிக்கி வறுபடும் திரைப்பட இயக்குநர்!

 
na

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தனது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி,  ’’நீ சரியான ஆம்பளையா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தா நேராக வாக்காளர்களை சந்தி.. திராணி இல்ல, தெம்பு இல்ல, எதிர்க்க சக்தி இல்ல.  அண்ணா திமுகவை எதிர்க்க சக்தி கிடையாது.  கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு, ஏழை மக்களை ஆங்காங்கே அழைத்து வந்து, 120 இடத்துல கொட்டகை அமைச்சு அமர வச்சிருக்கீங்க.’’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.

இதற்கு மூடர் கூடம், கொளஞ்சி படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் நவீன், ’’ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?  இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதை பார்த்துவிட்டு இபிஎஸ் ஆதரவாளர்கள் நவீனை வறுத்தெடுத்து வருகின்றார்கள்.

v

’’ நீ எல்லாம் ஆம்பளையா என கேட்டால் பெண்களை இழிவு படுத்துவதா?முதல நீங்க சினிமா துறையில் பிரா ஜட்டியோட நடிகைகள நடிக்க வைக்குறத நிறுத்துங்க யா,   அப்போ நீ கோமால இருந்தயா?  டேய் திமுக கூட்டத்தில் பெண்கள் மீது அத்துமீறிய போது வாய தொறந்தயா ?  நீ ஆம்பளையா இருந்த அப்போ பேசிருக்கனும், வாயை திமுகவுக்கு வாடகைக்கு விட்டு பிழைக்கும் கொத்தடிமை நாய்க்கு பேச்சை பாரு, போன ஆட்சியில் அர்பன் நக்சலைட்டா சுத்துன பயதான நீ ? இப்போ நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லையா?

ஆண் பெண் விவாதமிருக்கட்டும்.  EPS சொல்லியதுல 120 இடத்துல  கொட்டகை அமைச்சு ரூபாய் கொடுத்து ஜனங்களை அடைச்சி வச்சிருக்காங்கன்னாரே . அது நெஜமா பொய்யா? நெஜம்னா அதுக்கு உங்களோட  ரியாக்ஷன் என்ன? பொய்ன்னா ஈரோடு வந்து பாருங்க.அட்டைக்கத்திங்க. 

திமுக கூட்டத்தில் பெண் காவலர்களிடம் அத்துமீறல் நடந்தபோது ஏன் பொத்திக்கிட்டு இருந்த தம்பி.  உங்கள் ட்விட்டர் பதிவுகளில் ஏராளமான சமூக நீதி சமூக நீதி என்ற வார்த்தை தென்பட்டது ஆனால் கடந்த மாதம் வேங்கை வாசலில் நடைபெற்ற சமூக அநீதியைப் பற்றிய பதிவு மட்டுமில்லை.  முதலாளி கோபித்துக் கொள்வார்கள் என்று அன்று மட்டும் சமூக நீதிக்கு  விடுமுறை அளித்து விட்டீர்களா ??

உன்னை மாதிரி சொம்பா இருக்கவங்களுக்கு ஆம்பளனா என்னான்னு தெரியறதுக்கு வாய்ப்பில்லை. உதயநிதி புரடக்சன்ல படம் பண்ணி பிழைச்சுக்கலாம்னு உருட்டுற உனக்கு எல்லாம் அதைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை

நல்லா கழுவி விடுங்க நவீனை.  சினிமா யார் கன்ட்ரோல இருக்கு னு கேட்க துப்பில்ல , எடப்பாடியார திட்டுன , எலும்பு துண்டு போடுவாரு உதய்ணா , அத வச்சு பொழச்சிக்கலாம்னு தான ட்விட் போட்டிங்க.. யோக்கியனா இருந்தா ராசா பேசியது , உதயநிதி பேசியதெல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேளு

ஏண்டா நவீன்,  மக்களை கொத்தடிமைகளாக கொட்டகையில் அடைத்து வைத்து தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் திமுக ஊழல் அமைச்சர்களை பார்த்து  கேள்வி கேட்டால் எப்படிடா பதுங்கு குழியில் இருந்து தினசதிருப்ப வெளிலவர்றீங்க.  உதயநிதியிடன் சான்ஸ் கேட்டு பிச்சை எடுக்க திமுக தவறை திசைதிருப்பும் மூடனே’’என்று வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.