தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? - ஜெ., உதவியாளர்

 
oe

தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று கேட்கிறார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.

அதிமுகவில் இரு அணிகளும் இன்னும் இணையவில்லை.  இவ்விருணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்கிற வகையில் நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது .  அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் நாக்கை துருத்தி ஆவேசப்பட்டது போல் இன்று எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிரணியாக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டி ஆவேசப் பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.

po

 சட்டமன்றத்தில் அதிமுகவின் இரு அணிகளையும் மோத விட்டு திமுக வேடிக்கை பார்க்கிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.  இந்த நிலையில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது வலைதள பக்கத்தில்,  ‘’ஒரு மனிதனுடைய வலியை அடுத்தவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த வலி தனக்கு வரும் போதுதான் தடுமாறுகிறார்கள். தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனநிலையே இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. 

ஒருவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் ஏன் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே விமர்சனங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒருவரை விமர்சிக்கின்ற போது அதில் உண்மை இல்லை என்றால் நீங்களும் ஒரு நாள் விமர்சிக்கப்படுவீர்கள் என்பதே காலம் நமக்கு உணர்த்தும் பாடம்.  அடுத்தவர் மனதை புண்படுத்த நீங்கள் தயாரானீர்கள் என்றால் உங்கள் மனதை புண்படுத்துவதற்கு காலம் காத்துக் கொண்டிருக்கிறது.  அடுத்தவர்களை குறை சொல்லி வாழப் பழகாதீர்கள். உங்கள் குறைகளை திருத்திக் கொண்டு வாழப் பழகுங்கள்’’இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்.

 இதற்கு,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள் தற்போது நான் நீ என்று அடித்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல தருவாயில் உங்கள் இந்த கருத்து அருமை என்றும், திருந்தமாட்டார்கள் அண்ணா என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர் அதிமுகவினர்.