அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணமா? இருமாநில அரசியலில் பரபரப்பு

 
k

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டு கட்டாக பைகளில் பெருமளவில் பணம் இருந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றம் சாட்டி இருப்பது தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முக்கிய பொறுப்பு ஏற்று இருக்கிறார்.   இணை பொறுப்பாளராக கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அவரை நியமித்திருக்கிறது.

a
 
கர்நாடக மாநிலத்தில் 86 தொகுதிகளின் பொறுப்பை அண்ணாமலை ஏற்று இருக்கிறார்.  மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 86 தொகுதிகள் அண்ணாமலையின் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. 

 இதற்காக கர்நாடக மாநிலத்தில் தீவிர சுற்று பயணம் செய்து வருகிறார் அண்ணாமலை.   கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை.   தேர்தல் பணிக்காக அண்ணாமலை நேற்று கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்திற்கு சென்றுள்ளார் .

பெரும்பாலும் காரிலேயே செல்லும் அண்ணாமலை நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி சென்று இருக்கிறார்.  இந்த ஹெலிகாப்டர் பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . அண்ணாமலை சென்ற அந்த ஹெலிகாப்டரில் பைகளில் கட்டு கட்டாக பெரும் அளவு பணம் கொண்டுவரப்பட்டது என்று உடுப்பி மாவட்ட கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வினய்குமார் சொர்கி குற்றம் சாட்டியிருக்கிறார் . இந்த குற்றச்சாட்டு தமிழக மற்றும் கர்நாடகா அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.