அழகிரியை சந்திக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?

 
அ

முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரைக்கு வரும் செய்தி இன்று காலையில் தான் தெரியும்.  அவர் என்னை சந்திக்கிறாரா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார் மு. க. அழகிரி.   மதுரையில் வரும் மார்ச் மாதம் ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்கின்றார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.   இதை முன்னிட்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அழகிரி இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

மறைந்த கருணாநிதி  திமுக தலைவராக இருந்தபோது  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க .அழகிரியால் கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளால் அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி.   கருணாநிதியின் மறைவுக்கு பின்னர்அழகிரி பாஜக மற்றும் அதிமுகவில் இணையப் போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் வந்தன. 

 கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் தனிக் கட்சி தொடங்க போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் தினமும் அவர் வீட்டு முன்பு குவிந்து வந்தனர்.  ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார் அழகிரி .  ஆனாலும் கடைசி நேரத்தில் அவர் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை.   ஆனாலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன் என்று சபதம் போட்டார் அழகிரி .  அதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.   கடைசியில் ஸ்டாலினுக்கு எதிராக அவர் எந்த அறிவிப்பும் செய்யவில்லை பிரச்சாரமும் செய்யவில்லை.

அ

 அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதல்வரானார்.   முதல்வராக பதவியேற்பு விழாவிற்கு  அழகிரி வரவில்லை . அவரது மகனும் மகளும் மட்டுமே வந்திருந்தனர்.   திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு மேல் ஆன பின்னரும் கூட ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு நிகழவே இல்லை .  

ஒரு துக்க வீட்டில் இருவரும் பங்கேற்றபோதும் கூட இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை .  அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பின்னர் மதுரை சென்று அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   இந்த நிலையில் வரும் மார்ச் மற்றும் மார்ச் மாதம் ஐந்து மற்றும் ஆறு தேதிகளில் மதுரையில் கள ஆய்வு மேற்கொள்ளவிற்கும் முதல்வர் அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுந்திருக்கிறது.

 கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது தாசில்தார் காளிமுத்து மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இன்று மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அழகிரி .  வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.   நீதிமன்ற வளாகத்தில் அழகிரியிடம்,  மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் தங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற  செய்தியாளர்களின் கேள்விக்கு,   முதலமைச்சர் மதுரைக்கு வருவதே இன்று காலையில் தான் தெரிந்து கொண்டேன் . அவர் என்னை சந்திப்பாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.