சவுக்கு சங்கர் கீழ் வேலை செய்கிறாரா அண்ணாமலை? காயத்ரி ரகுராம்

 
sa

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் ஒரு டேப் வெளியிட்டிருந்தார்.   அந்த ஆடியோ தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.   முதல்வரின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் குவித்து வைத்துவிட்டு விழிப்பதாக அந்த ஆடியோவில் பிடிஆர் சொல்வது போல் இருந்தது .

p

இந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது என்று திமுக தரப்பில் சொல்லி வந்தாலும்,  தலைமை இது குறித்து எந்த அறிவிப்பும் செய்யாமல் இருக்கிறது.  இந்த ஆடியோவை அடுத்து பிடிஆர் பழனிவேலு தியாகராஜனை பதவி நீக்கம் செய்ய தலைமை முடிவு எடுத்திருந்தது என்றும்,  அப்படி செய்து விட்டால் இந்த ஆடியோ உண்மை என்பது போல் ஆகிவிடும் அந்த ஆடியோவில் பிடிஆர் சொன்னதும் உண்மை என்று ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் என்பதால் பிடிஆர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்ற தகவல் பரவி வருகிறது.

 இந்த நிலையில் பிடிஆர் டேப் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணாமலை. இந்த ஆடியோவிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் சப் -டைட்டிலுடன் குரல் பதிவு வெளியாகி இருக்கிறது.  இந்த ஆடியோவில்,   நான் அரசியலுக்கு வந்தது முதல் ஒரு நபர் ஒரு பதவி என்கிற கொள்கைக்கு ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயமே இதுதான்.   கட்சியை பார்த்துக் கொள்வது மக்களை பார்த்துக் கொள்வது என்று இரண்டு பொறுப்புகளும் பிரிந்து இருக்க வேண்டும் . ஆனால் இங்கே எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் எடுக்கிறார்கள்.

p

 நிதி மேலாண்மை செய்வது எளிது . அவர்களுக்கு வரும் ஊழல் பணம் மொத்தத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்.    முதல்வரின் மகனும் மருமகனும் தான் இங்கே கட்சி மொத்தமும்.    அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள்.  இதனால் கடந்த எட்டு மாதங்களாக நான் பார்த்து பிறகு ஒரு முடிவு செய்து விட்டேன். இதில் எனக்கு இருக்கும் பெரும் வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால் கூட இந்த குறுகிய காலத்தில் நான் வெளியேறினால் அவர்கள் செய்தது அனைத்தும் அவர்களுக்கே திருப்பி அடிக்கும்.

நான் இந்த யுத்தத்தை மிக விரைவில் கைவிட்டதாக என் மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன்.   நான் அந்த பதவியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று அந்த குரல் பதிவு முடிகிறது.

g

 பி.டி.ஆரின் முதல் ஆடியோ வெளியான பரபரப்பு இன்னும் அடங்குவதற்குள் இரண்டாவது பகுதி வெளிவந்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.  இந்த ஆடியோ முதலில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வசம் தான் கிடைத்தது என்றும்,  அவர் அந்த ஆடியோவை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் வெளியிட்டதாகவும் அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.   இதை வைத்துதான் நடிகை காயத்ரி ரகுராம்,  சவுக்கு சங்கர் அண்ணா, அண்ணாமலை உங்களுக்கு கீழ் வேலை செய்கிறாரா? அண்ணாமலை ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆலோசகராகச் சேர்ந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆடியோ வீடியோ கசிவு மற்றும் சோர்ஸில் உங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கிறார்.   சவுக்கு ஷங்கர் சகோ. அண்ணாமலையை ப்ரோமோட் செய்து உங்கள் நிறுவனத்தில் 200 போனஸ் கொடுங்கள், அதாவது அவர் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்தால் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.