இருந்த ஒன்னும் போச்சு! அதிர்ஷ்டம் இல்லாதவரா அண்ணாமலை?

 
a

ஜனநாயகம் வென்றுள்ளது . ஏழை மக்களின் சக்தி வெற்றிபெற்றிருக்கிறது. இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கூறியிருக்கிறார் ராகுல்காந்தி.  

ra

நடந்து முடிந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 138 இடங்களிலும் பாஜக 62 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.  இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க போவது உறுதியாக இருக்கிறது.   ஆட்சியை இழந்துவிட்டது பாஜக.  இதனால்,    ’’எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம்’’ என்று கூறி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.  மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம் என்கிறார்  கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா.

கர்நாடகத்தில்  காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது.  இந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகா சென்று வந்தும்,  வீதி விதியாக சென்று வாக்கு கேட்டும் பாஜகவுக்கு காங்கிரஸ் வெற்றியில் பாதி கூட கிடைக்கவில்லை.  அமைச்சர்கள் பலரும் தோல்வி முகம் அமைந்திருக்கிறது.

kcp

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இருந்த ஒரே பலமும் போய்விட்டது.  கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .  பாஜக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக  படு தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி இதுகுறித்து விமர்சித்துள்ளார்.

அவர்,  ‘’அதிர்ஷ்டம் இல்லாதவரா  அண்ணாமலை?  கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  கர்நாடகாவில் தேர்தல் இணைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார், ஆட்சி பறிபோனது.   தற்பொழுது தென் மாநிலங்களில் அதிகமாக  முன்னிலை படுத்தப்படுகிறார் அண்ணாமலை. அவர் தீவிரமாக களப்பணியாற்றி 2024-ல் மோடியின் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பறித்துவிடுவாரா?’’என்று கேட்டிருக்கிறார்.