சுவாரஸ்யமான நேரங்கள் -அண்ணாமலை வெளியிட்ட வீடியோ

 
an

தேர்தல் பிரச்சாரம் என்றாலே சுவாரசியங்களுக்கு பஞ்சம் இருக்காது.   அப்படித்தான் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கட்சியினரின் சுவாரசியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 

ann

 கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.   பெரியார் வழியில் வந்த திமுகவினரும் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டிருக்கிறார்கள்.   இந்த நிலையில் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என்று இளங்கோவன் பிரச்சாரத்தில் குடுகுடுப்பைக்காரர் வாக்கு சொல்கிறார்.   அது மட்டுமல்லாமல் திமுக அமைச்சர் அன்பில் அருகிலும் நின்று குடுகுடுப்பைக்காரர் வாக்கு சொல்கிறார் .  இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

 இளங்கோவன் அருகில் நின்ற அந்த குடுகுடுப்பைக்காரர் இளங்கோவன் பரிசுத்தமாவர் என்று ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா,  முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் வந்ததுக்கு பிறகு கொள்ளை இல்லாத ஒரு நல்லாட்சி நடப்பதாக ஜெக்கமா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா.., இந்த தொகுதியில் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா..,  இந்த தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சரியாக கணித்து வைத்திருக்கிறார் இளங்கோவன் என ஜக்கா அம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என்று பிரச்சாரம் செய்தார் .


அடுத்து அதே தொகுதியில் பிரச்சாரம் செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அருகில் நின்ற அந்த குடுகுடுப்பைக்காரர்,  தமிழக முதலமைச்சர் இல்லம் தேடி கல்வி கொடுத்து இருக்கிறார் என்று ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.   இந்த தொகுதியில் இளங்கோவன் கை சின்னத்தில் ஜெயிப்பார் என்று ஜக்கமா சொல்றா ஜக்கம்மா சொல்றா.   முதல்வர் மு. க. ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு பெண்கள் எல்லாம் இலவசமாக பஸ்ல போறாங்க என்று ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என்று குடுகுடுப்பைக்காரர் சொல்லிக் கொண்டே போகிறார்.

 பெரியாரின் பேரன் அருகில் நின்றும்,  பெரியாரின் வழியில் வந்த பெரியாரைப் போல் கடவுள் மறுப்பை கொண்டிருக்கின்ற திமுகவினர் அருகில் நின்றும் குறுகுடுப்பைக்காரர் சொல்வதை தமிழ்நாட்டில் பெரியாரின் பேரன் ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார் தமிழகத்தின் சுவாரசியமான நேரங்கள் இது என்று குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை.